(என்.வீ.ஏ.)
இலங்கைக்கு எதிராக டாக்காவில் இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமான 2 ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் குவித்த அபார சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் பலம்வாய்ந்த நிலையை அடைந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 50 நிமிடங்களில் இலங்கை வேகப் பந்துவிச்சாளர்களான கசுன் ராஜித்தவும் அசித்த பெர்னாண்டோவும் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் எஞ்சிய 310 நிமிடங்களை லிட்டன் தாஸ், முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இருவரும் தங்களது ஆதிக்கத்துக்குள் வைத்துக்கொண்டனர்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 7ஆவது ஓவரில் 5ஆவது விக்கெட்டை இழந்தபோது வெறும் 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிக்குர் ரஹிம். லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் வெளிப்படுத்திய அபார துடுப்பாட்டங்களின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 277 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
மஹ்முதுல் ஹசன் ஜோய் (0), தமிம் இக்பால் (0), அணித் தலைவர் மொமினுள் ஹக் (9), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (8) ஆகியோரின் விக்கெட்களை கசுன் ராஜித்த மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் 7 ஓவர்களுக்குள் வீழ்த்தியபோது இலங்கை அணி மிகவும் பலமான நிலையில் இருந்தது.
ஆனால், அதன் பின்னர் முதல் நாள் ஆட்டம் முடியும்வரை இலங்கையினால் மேலதிக விக்கெட் எதனையும் வீழ்த்த முடியாமல் போனது.
மிகவும் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிய முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 253 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை பலப்படுத்தினர்.
முஷ்பிக்குர் ரஹிம் 252 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 115 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
முஷ்பிக்குரைவிட சற்று அதிகமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 221 பந்துகளில் 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 135 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
லிட்டன் தாஸ் 47 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் கொடுத்த பிடியை மாற்றுவீரர் கமிந்து மெண்டிஸ் தவறவிட்டார். அதனைவிட வேறு எந்த வாய்ப்பையும் இருவரும் கொடுக்கவில்லை.
பந்துவீச்சில் கசுன் ராஜித்த 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆடுகளம் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையாததால் இலங்கை சுழல்பந்துவீச்சாளர்களால் முதல் நாளன்று சாதிக்க முடியாமல் போனது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM