(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 105821பேர் சென்றுள்ளனர்.
இது கடந்த வருட முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 286 வீத அதிகரிப்பு என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் சுய வழியில் மற்றும் அனுமதியளிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இதுவரை 105821பேர் சென்றுள்ளனர். இது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 5மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், நுற்றுக்கு 286வீத அதிகரிப்பாகும்.
பணியகத்தின் தரவுகளின் பிரகாரம் 2021 முதல் 5மாதங்களுக்குள் 27360 பேர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அது இந்த வருடம் 78461ஆல் அதிகரித்துள்ளது.
அத்துடன் 2022 முதல் 5மாதங்களுக்குள் இதுவரை சுய வழியாக வெளிநாட்டு தொழிலுக்காக 67156பேர் சென்றுள்ளனர். அதில் 30040 ஆண் தொழிலாளர்களும் 17121 பெண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
அதேபோன்று இந்த வருடத்தில் இதுவரை அனுமதி அளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் வழியாக 25224 பெண்களும் 13441 ஆண்களும் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
அதன் பிரகாரம் இந்த வருடம் இதுவரை மொத்தமாக 105821பேர் வெளிநாட்டு தொழிலுக்காக சென்றுள்ளனர்.
சுய வழியாக வெளிநாட்டு தொழிலுக்கு சென்றுள்ளவர்களில் அதிகமானவர்கள் கட்டார் நாட்டுக்கே சென்றுள்ளனர்.
அதன் எண்ணிக்கை 19133ஆகும் அதற்கு அடுத்தபடியாக குவைட்டுக்கு 12701பேர், ஐக்கிய அரபு இராஜியத்துக்கு11000பேர் மற்றும் தென் கொரியாவுக்கு1754 பேர் சென்றுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் இளைஞர்கள் அதிகளவில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் இந்த வருடத்தின் முதல் 3மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பண பரிமாற்றம் 783 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மிகவும் சிரமப்பட்டு உழைக்கும் பணத்தை நம்பிக்கையுடன் தங்களது உறவினர்களுக்கு அனுப்புவதாக இருந்தால் இந்த நாட்டின் வணிக வங்கி ஊடாக தங்களது பண பரிமாற்றங்களை அனுப்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM