( எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, தன்னை அப்பதவியிலிருந்து வேறு பொறுத்தமான கடமைகள் தொடர்பில் இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.  பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

மைனா கோ கம”, “கோட்டா கோ கம” தாக்குதல் : தனது ஆலோசனைகளை மேல் மாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றவில்லை - பொலிஸ் மா அதிபர் | Virakesari.lk

 டப்ளியூ. திலகரத்ன தொடர்பில் பல்வேறு விமர்சங்கள் உள்ள நிலையிலும், அவர் ராஜபக்ஷக்களுக்கு பக்கச்சார்ப்பானவர் எனும்  கருத்து பரவலாக  பொலிஸ் திணைக்களத்தில் உலா வரும் நிலையிலும்,  தான் சி.ஐ.டி. பிரதானி பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி அவர் இந்த இடமாற்ற  கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

 அதன்படி மிக விரைவில் சி.ஐ.டி.க்கு புதிய பிரதானி ஒருவர் நியமிக்கப்படலாம் என பொலிஸ்  தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 டப்ளியூ. திலகரத்ன, பல வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான  பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவராவார். 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் அவர்,  சி.ஐ.டி. பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர்  அங்கிருந்து மாற்றப்பட்டு பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்தி  சி.ஐ.டி. பிரதானியாக அவர் நியமிக்கப்பட்டார்.

 இந் நிலையில், மைனா கோ கம, மற்றும் கோட்டா கோ கம மீதான தாக்குதல் குறித்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபரால்  பிரதிப் பொலிஸ்  மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவிடமே கையளிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ இந்த விவகாரத்தில் ஒரு சந்தேக நபராக கருதப்படல் வேண்டும் என பரவாலன குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், டப்ளியூ. திலகரத்னவின் கீழ் அவ்விசாரணைகள் நியாயமாக நடக்குமா எனவும் பல அமைப்புக்கள்  சந்தேகம் எழுப்பி சட்ட மா அதிபருக்கும், பொலிஸ்  மா அதிபருக்கும் முறையிட்டிருந்தன.

 இவ்வாறான பின்னணியிலேயே, தன்னை சி.ஐ.டி.யிலிருந்து வேறு பொருத்தமான கடமைகளுக்கு மாற்றுமாறு பிரதிப் பொலிஸ்  மா அதிபர் டப்லியூ. திலகரத்ன பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.