மஸ்கெலியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தோட்ட தொழிலாளி - பொறுப்பற்று நடந்துகொண்ட தோட்ட நிர்வாகம் 

By T Yuwaraj

23 May, 2022 | 04:18 PM
image

மஸ்கெலியா, காட்மோர் அடம்ஸ்பீக் பகுதியினைச் சேர்ந்த 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியான எல்லன் கணேசன் என்பவர் கடந்த 17 ஆம் திகதி பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதற்கான எவ்விதமான பொறுப்பினையும் தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் தோட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிடுகையில், 

இங்கு வசிக்கும் மக்கள் நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்வதற்கான வாகன வசதிகள் இல்லை. தோட்ட நிர்வாகமும் வாகன வசதிகளை வழங்குவதில்லை. தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் தனியார் வாகனங்களும் சேவையில் ஈடுபடவில்லை. 

எனினும் எங்களுக்கு வாகன சேவைகள் கிடைக்கப் பெறாவிட்டால் இறந்தவரை பல நாட்களாக அங்கேயே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 3 மணித்தியாலங்கள் கழித்தே சுவசெரிய அம்பியூலன்ஸ் வழங்கப்பட்டது. அதுவரை அவர் உயிருடன் இருந்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right