உள்நாட்டு போட்டியை வென்ற இருவரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள‘Cannes Lions International Festival of Creativity’ நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (SLIM)தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக ஆநவயட குயஉவழச உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இருந்து மிகவும் திறமையான சந்தைப்படுத்தல் வல்லுனர்களைக் கொண்ட 20 அணிகள் பங்குபற்றியிருந்தன.

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அணி இந்த மதிப்புமிக்க விருதை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.“இந்த வெற்றியால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

நெஸ்லே லங்கா நிறுவனத்தில் எங்களின் தொழில் வாழ்க்கையில் கிடைத்த அனைத்து வாய்ப்புகள், கற்றல் மற்றும் அனுபவங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இது நாட்டின் சிறந்த இளம் சந்தைப்படுத்தல் வல்லுனர்களுக்கு எதிராக வெற்றிகரமாக போட்டியிட எங்களுக்கு உதவியது.

உலக அரங்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பெரும் பாக்கியம். வாழ்நாளில் ஒருமுறையே கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி, நெஸ்லே லங்காநிறுவனம் மற்றும் இலங்கைக்கு பெருமையை ஈட்டிக் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்!” என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் சாதாரண வெப்பநிலையில் பேணக்கூடிய பாலை மூலமாகக்கொண்ட தயாரிப்புக்களின் சிரேஷ்ட வர்த்தகநாம அதிகாரியான சமரிது விதாரண மற்றும் நெஸ்லே

லங்கா நிறுவனத்தின் மைலோ பவுடர் உற்பத்தியின் உதவி வர்த்தகநாம முகாமையாளரான மினிந்துஅலஸ் ஆகியயோர் கருத்து தெரிவித்தனர்.