கேரள கஞ்சாவுடன் இருவர் கைது : இரு சொகுசு கார்களும் மீட்பு

Published By: Vishnu

23 May, 2022 | 03:43 PM
image

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 520 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சப்புகஸ்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் 520 கிலோ 198 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் பெண் ஒருவரும் 34 வயதுடைய தலங்கமை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து அதி சொகுசு கார்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு  தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47