எஸ்.ஜே.பிரசாத்

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று ஆரம்பமான நிலையில் மதிய உணவு இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு குசல் மெண்டிஸ் நெஞ்சு வலியால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து குசல் மெண்டிஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மெண்டிஸ் 23 ஆவது ஓவரில் மைதானத்தில் நெஞ்சுவலியால் கீழே சரிந்து படுத்துவிட்டார்.

மருத்துவ ஊழியர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பு அவர் சற்று அசௌகரியத்துடன் காணப்பட்டார்.

உடனே அவர் மார்பைப் பிடித்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மருத்துவர் மன்சூர் ஹொசைன் சௌத்ரியின் கருத்துப்படி, மெண்டிஸ் நீரிழப்பு காரணமாக அவர் இந்த அசெளகரிகயத்திற்கு முகங்கொடுத்திருக்கலாம் என்றும் அதேவேளை இரைப்பை அழற்சி ஒரு சாத்தியமான காரணம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் எவ்வளவு காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டும், டாக்கா டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்தும் உடனடியாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.