இலங்கையில் பயணிகள் மோட்டார் கார் சந்தையில் காணப்படுகின்ற வளர்ச்சி வாய்ப்புக்களை மதிப்பீடு செய்துள்ள DIMO, நாடெங்கிலுமுள்ள Tata Motors விற்பனை மையங்களின் தற்போதைய வலையமைப்பை மேலும் விஸ்தரித்துள்ளது.

இலங்கையில் மூன்று பிரத்தியேகமான Tata பயணிகள் மோட்டார் கார் விற்பனை காட்சியறைகளை ஆரம்பிப்பதற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் முதலீடு செய்யும் முகமாக புதிய 3S வசதியுடன் (விற்பனை, பேணற்சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) 30 இற்கும் மேற்பட்ட மையங்கள் கொண்ட வலையமைப்பாக பலப்படுத்தியுள்ளது.

இதன் முதற்கட்டமாக தனது பெறுமதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த கொள்வனவு அனுபவத்தை வழங்கும் வகையில் ஒக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் காட்சியறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

நீர்கொழும்பு காட்சியறையானது இல.258,சிலாபம் வீதி, பெரியமுல்லை என்ற முகவரியிலும், களுத்துறை காட்சியறையானது இல.768, காலி வீதி, கட்டுக்குருந்த என்ற முகவரியிலும் அமைந்துள்ளன.

திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய, திரு ரஞ்சித் பண்டிதகே, (பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், DIMO) கூறுகையில்,

“பயணிகள் மோட்டார் கார் வியாபாரத்தை உச்சத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளோம். பெறுமதிவாய்ந்த எமது வாடிக்கையாளர்கள் தற்போது விசாலமான மற்றும் நவீன வலையமைப்பின் மூலமாக பல நன்மைகளை அனுபவிக்கவுள்ளதுடன், இது தொடர்ந்தும் விஸ்தரிக்கப்பட்டு, மேம்படுத்தப்படவுள்ளது.”

நீர்கொழும்பு காட்சியறை திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய ஜொனி உம்மன் (தலைமை அதிகாரி, சர்வதேச வியாபாரப் பிரிவு, பயணிகள் வாகனங்கள், Tata Motors) கூறுகையில்,

“இலங்கையில் Tata Motors நிறுவனத்தின் தொடர்ச்சியான விஸ்தரிப்பு மற்றும் இந்த திறப்பு விழா சுப நிகழ்வில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம். 

இலங்கையில் பயணிகள் வாகன சந்தையில் எமது விஸ்தரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் முதலாவது பாரிய முன்னெடுப்பாக இந்த திறப்பு விழா நிகழ்வு மாறியுள்ளது.”

இந்த நவீன மற்றும் பிரத்தியேக காட்சியறைகள் சராசரியாக 1500 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட தாராளமான இட வசதிகளைக் கொண்டுள்ளதுடன் அங்கு 5 முதல் 6 வரையான வாகனங்களை காட்சிப்படுத்த முடியும். இதன் மூலமாக தொடர்ச்சியாக வளர்ச்சிகண்டு வருகின்ற Tata பயணிகள் வாகனங்களை வாடிக்கையாளர்கள் சௌகரியத்துடன் அனுபவித்து, தமது விருப்பத்திற்குரிய வாகனத்தை தெரிவுசெய்ய முடியும். உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பில் பல்வேறு பயிற்சி அமர்வுகள் மற்றும் செயலமர்வுகளில் பங்குபற்றியுள்ள DIMO பணியாளர்கள் விரைவான சேவையை வழங்கி நீண்ட கால அடிப்படையிலான வாடிக்கையாளர் உறவுமுறைகளைக் கட்டியெழுப்புவதற்கு இப்புதிய காட்சியறைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் Tata பயணிகள் மோட்டார் கார்களின் விசாலமான வலையமைப்பு விஸ்தரிப்பு தொடர்பில் DIMO கொண்டுள்ள மூலோபாயத்திற்கு, 2 வருடங்கள் அல்லது 50,000 கிமீ பாவனை உத்தரவாதம் 3 தொழிலாளர் கட்டணங்களின்றிய பேணற் சேவைகள், 24 மணி நேர வீதி உதவு சேவை நாடளாவிய விற்பனை பேணற்சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் வலையமைப்பு, மற்றும் அதிசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் அசல் Tata துணைச் சாதனங்கள் ஆகியவற்றுடன் புகழ்பெற்ற விற்பனைக்குப் பின்னரான சேவையின் பக்கபலமும் உண்டு.

1961 ஆம் ஆண்டு இலங்கையில் தனது ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற விநியோக பங்காளரான Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்துடனான கூட்டிணைவின் மூலமாக தனது சர்வதேச தொழிற்பாடுகளை Tata Motors நிறுவனம் ஆரம்பித்திருந்ததுடன் தனது வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்களின் அடிச்சுவட்டை உறுதியாக ஸ்தாபித்துக்கொண்டுள்ளது. 

Tata Motors நிறுவனத்தைப் பொறுத்தவரையில் முக்கிய கவனம் செலுத்தியுள்ள ஒரு சந்தையாக இலங்கை அமைந்துள்ளதுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட அதிசிறந்த பெறுமதியை வழங்கி வருகின்றது.

2004 ஆம் ஆண்டில் இலங்கையில் பயணிகள் வாகனங்களை அறிமுகப்படுத்தியிருந்ததுடன் Indica, Indigo, Vista, Manza, Safari, Zest, Bolt மற்றும் Nano ஆகியன அவற்றுள் அடங்கியுள்ளன.