(என்.வீ.ஏ.)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற கடைசி ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் லீக் போட்டியில் 5 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் வெற்றியீட்டியது.

He couldn't pull off this run out on the last ball, but Nathan Ellis did pick up two wickets in the final over, Punjab Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 22, 2022

ஹார்ப்ரீட் ப்ராரின் துல்லியமான பந்துவீச்சு, லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி துடுப்பாட்டம் ஆகியன பஞ்சாப் கிங்ஸை 2022 ஐபிஎல் அத்தியாயத்திலிருந்து வெற்றியுடன் விடைபெறச்செய்தது.

ஐபிஎல் அணிகள் நிலையில் 6ஆம், 7ஆம், 8ஆம் இடங்களைத் தீர்மானிப்பதாக அமைந்த இப் போட்டியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் 6ஆம் இடத்தை உறுதி செய்துகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

Mayank Agarwal winces in pain as the physio does his job after the the batter was hit on his ribs, Punjab Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 22, 2022

15ஆவது ஓவர்வரை மந்த கதியில் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி 32 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்து சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

வொஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் பகிர்ந்த 58 ஓட்டங்களே முழுப் போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

துடுப்பாட்டத்தில் அபிஷேக் ஷர்மா (43), ரொமாரியோ ஷெப்பர்ட் (26 ஆ.இ.), வொஷிங்டன் சுந்தர் (25), எய்டன் மார்க்ராம் (21), ராகுல் த்ரிபாதி (20) ஆகிய ஐவரே திறமையை வெளிப்படுத்தினர்.

Fazalhaq Farooqi celebrates dismissing Shikhar Dhawan, Punjab Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 22, 2022

பந்துவீச்சில் ஹார்ப்ரீத் ப்ரார் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 15.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Bhuvneshwar Kumar, Sunrisers' captain in the absence of Kane Williamson, and Mayank Agarwal walk out for the toss, Punjab Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 22, 2022

லியாம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்று பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை இலகுவாக்கினார்.

அவரை விட ஷிக்கர் தவான் (39), ஜொனி பெயார்ஸ்டோவ் 23), எம். ஷாருக் கான் (19), ஜித்தேஷ் ஷர்மா (19) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.