அம்பாறைக்கு பெற்றோலை கடத்திச் சென்ற பொலிஸ் சாஜன், ஒய்வு பெற்ற இராணுவ வீரர் கைது 

By T Yuwaraj

22 May, 2022 | 10:38 PM
image

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசததில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு பிக்கப் ரக வாகனத்தில் பெற்றோல் கடத்திச் சென்ற பொலிஸ் சாஜன், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட இருவரை  910 லீற்றர் பெற்றோலுடன் வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து; இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை  கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை நோக்கி சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்ற பிக்கப் ரக வாகனத்தை வெல்லாவெளி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பொலிசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன்போது அந்த வாகனத்தில் வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வியாபாரத்துக்காக கலன்களில் மறைத்து  எடுத்துச் செல்லப்பட்ட 910 லீற்றர் பெற்றோலை மீட்டதுடன் அதனை எடுத்துச் சென்ற மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 45 வயதுடைய பொலிஸ்சாஜன் மற்றும் ஓய்வு பெற்ற 41 வயதுடைய இராணுவ வீரர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right