'அப்பாவி மக்களை கொலை செய்யாதே' : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: MD.Lucias

27 Oct, 2016 | 10:37 AM
image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

 யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58