நாளுக்கு நாள் நீண்டு செல்லும் எரிபொருள் வரிசைகள் : பொறுமையிழக்கும் மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம்

By T Yuwaraj

22 May, 2022 | 10:30 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

எரிபொருளை பெற்றுக்கொள்ள தொடரும் நீண்ட வரிசை | Virakesari.lk

எவ்வாறிருப்பினும் எரிபொருள், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான வரிசைகள் நாளாந்தம் நீண்டு கொண்டே செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் இறுதி நேரத்தில் எரிபொருள் கிடைக்கப் பெறாமையினால் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , குறித்த பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நள்ளிரவில் எரிபொருள் நிறைவடைந்த நிலையில் , முத்துராஜவெல முனையத்திலிருந்து எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் இரவிரவாக முன்னெடுக்கப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம் ; எரிபொருள் நிலையங்களில் நீண்ட  வரிசையில் மக்கள் | Virakesari.lk

இன்று விடுமுறை தினம் என்ற போதிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் , 85 000 சிலிண்டர்கள் சந்தைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே வேளை இன்றைய தினம் மேலும் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 7 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் கொழும்பு - கொச்சிக்கடையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போதிலும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் , மட்டக்குளி - புறக்கோட்டை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் சில மணித்தியாலங்களுக்கு ஸ்தம்பிதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right