(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்பதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

அமைச்சரவையில் 10 அமைச்சுக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன.

முழு நாடும் எதிர்பார்க்கும் தேசிய வேட்பாளரையே களமிறக்குவோம்": பொதுஜன பெரமுன  | Virakesari.lk

அமைச்சரவை நியமனத்தில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்குமாறு பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதிஇபிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி உட்பட பிரதமர் உள்ளடங்களாக அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள பின்னணியில் இதுவரை 13 பேர் அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளனர்.

புதிய அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவின் 10 பேருக்கு அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள பின்னணியில் இதுவரை அதில் 5 பேருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன. மிகுதியாகவுள்ள 5 அமைச்சுக்கு இதுவரை 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார நளின் பெர்னாண்டோ ஆகியோரும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் டிரான் அலஸ் ஆகியோரும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

பொதுஜன பெரமுனவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுக்களை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குமாறு ஒரு தரப்பினரும் இளம் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சரவையை முழுமைப்படுத்தும் வகையில் ஏனைய அமைச்சுக்களுக்கான நியமனம் இன்னும் ஓரிரு நாட்களில் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.