அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது

By T Yuwaraj

22 May, 2022 | 03:57 PM
image

வவுனியா ஓமந்தை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி அதிகளவான மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று (22) காலை கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி மாடுகளை ஏற்றிசென்ற வாகனம் ஒன்றை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி அதிகளவான மாடுகள் ஏற்றி செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த பொலிசார் மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right