மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று (22) காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்ற நிலையில் குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை மோதியதோடு, சிறிது தூரம் மோட்டார் சைக்கிலில் குறித்த சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக குறித்த சிறுவன் அப்பகுதியில் சென்றவர்களால் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில் குறித்த சிறுவன் படுகாயம் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த விபத்து தொடர்பாகவும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும்,பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM