(எம்.மனோசித்ரா)
கனேடியப்பாராளுமன்றத்தில் நினைவேற்றப்பட்ட மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தும் பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்காக கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் அமெண்டா ஸ்ட்ரோஹானுடனான சந்திப்பின் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக்க கூறப்படும் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பினையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறித்த பிரேரணையின் அப்பட்டமான பொய்யான உள்ளடக்கத்தை திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம். இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை.
சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழிநுட்ப சொற்களை எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்த பிரேரணையின் தவறான மற்றும் பாரபட்சமான தன்மை , இதன் விளைவாக பொது களத்தில் உருவாகியுள்ள இலங்கை மீதான எதிர்மறையான கருத்துக்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு , பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் 6 தசாப்தத்திற்கும் மேலாக நீடித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்று பதில் உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் போது அமைச்சரின் கோரிக்கைக்கு பதிலளித்த கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் , கனடாவின் நாடாளுமன்ற பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் கட்டுப்பாடற்ற சட்டமியற்றும் தன்மையைக் குறிப்பிட்டார்.
தகுந்த நடவடிக்கைக்காக அரசியல் முன்முயற்சியின் உள்ளடக்கத்தினை கனடாவின் வெளியுறவு , வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி திணைக்களத்திற்கு தெரிவிக்கவும் அவர் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM