இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

மத்திய இத்தாலியில் 2 மணி இடைவெளியில் ஏற்பட்ட இரு பூமியதிர்ச்சியினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

விஸ்ஸோ நகரில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இரு பூமியதிர்ச்சிகள் முறையே ரிச்டர் அளவு கோளில் 5.4 மற்றும் 5.9 ஆக பதிவானதாக இத்தாலி பூமியதிர்ச்சி ஆய்வக மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இத்தாலியாவின் அமட்ரைஸ் பகுதியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் 298 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.