அ.தி.மு.க தள்ளாடுகிறதா ? காதிருக்கிறதா?

Published By: Digital Desk 5

22 May, 2022 | 12:44 PM
image

-குடந்தையான்

தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆளுங்கட்சியாக ஆட்சி செய்த அரசியல் இயக்கம் அ.தி.மு.க. ஆனால் அந்த இயக்கம் மக்கள் செல்வாக்கு இல்லாத தலைமையினால் தற்போது தள்ளாடுகிறது என்றும் அ.தி.மு.க.வின் வலிமையே அக்கட்சியின் தொண்டர்கள் தான். எனவே வாய்ப்புக்காக அக்கட்சி காத்திருக்கிறது. 

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடனான கூட்டணியை தொடரும் போது தான் அக்கட்சி சுய அடையாளத்தை இழந்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை வலிமையான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்யவில்லை.

அந்த பணியை மறைமுக நிர்பந்தத்தின் காரணமாக பா.ஜ.க.விற்கு விட்டுக்கொடுத்து கட்சியை தொண்டர்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டது இரட்டைத்ததலைமை.

ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. செய்து வரும் அனைத்து அராஜக செயல்களையும், அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல், லஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகளை உடனடியாக மக்களிடத்தில் எடுத்துச்சென்று, அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும், அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. 

ஆனால் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வின் கூட்டணி தொடர்வது குறித்து, அக்கட்சியின் சிறுபான்மையின தொண்டர்களின் உணர்வை, தொடர்ந்து இரட்டை தலைமை ஏற்க மறுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் வழி வகைகளை கண்டறியாமல் தவித்து வருகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக அரசு இயந்திரத்தின் உதவியுடன் பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்கி வரும் இந்து வாக்கு வங்கி, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பா.ஜ.க.விற்கோ அல்லது அ.தி.மு.க.விற்கோ பலனளிக்கவில்லை.

ஆகவே, தொடர்ந்து அதேபாதையில் பயணிப்பது அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை விட அ.தி.மு.க.விற்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும் நிலையுள்ளது.

அரசியல் ரீதியாக அ.தி.மு.க. வலிமையாக இல்லை என்பதற்கு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அக்கட்சி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யார் என்பதை இதுவரை அறிவிக்காத நிலையே பெரும் உதாரணமாகின்றது.

மறைந்த புரட்சித்தலைவியின் ஆளுமையின் கீழ் அ.தி.மு.க. இருந்தபோது, தி.மு.க.வை முந்திக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவித்து விடும்.

ஆனால் தற்போது இரட்டைத் தலைமை தொடர்ந்து நீடிப்பதாலும், இரட்டை தலைமைக்குள் யாருடைய ஆதிக்கம் அதிகம் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதிலும் தான் அக்கட்சியின் உள்ளக நிலைமைகள் காணப்படுகின்றன. 

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களாகவும்,  எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டுமென ஒருதரப்பும்,  சசிகலா கட்சியை கைபற்ற மேற்கொண்டு வரும் முயற்சியை திசை திருப்பவும், தடுக்கவும், அவ்வின பிரதிநிதி ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென பிறிதொரு தரப்பும் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் அவ்விரண்டு வேட்பாளர்கள் யார்? என்பது தெளிவான பிறகுதான், அ.தி.மு.க.வின் அரசியல் அணுகுமுறை எப்படி? என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டும். அதுவரையில் குழப்பநிலை நீடிக்கத்தான் போகின்றது. 

சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, கல்விச் சான்றிதழ் கட்டண உயர்வு. என தி.மு.க. அரசு தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் எதிர்ப்பையும், கண்டனங்களையும்  தெரிவிக்காதிருக்கையில் அப்பணியை பா.ஜ.க.வின் முன்னெடுத்து வருகின்றது. 

தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்தும் பல போராட்டங்களுக்கு அ.தி.மு.க.வினர் பங்குபற்றி ஆதரவளித்து வருவதும் அக்கட்சிக்கு தான் தேர்தல் காலங்களில் பலனளிக்கும்.

தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸைச் சுமப்பது போல், பா.ஜ.க.வை அ.தி.மு.க. சுமக்கிறது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர்த்து வேறு எங்கும் அக்கட்சியின் செல்வாக்கு உயரவில்லை. அதனால் அக்கட்சியின் தமிழக அடையாளம் அ.தி.மு.க. தான் என்பதும் வெளிப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் ஆட்சி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க. கூட்டணியிலிருந்து பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி அதிருப்தியடைந்து பா.ஜ.க.விற்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்ககியிருக்கிறது. 

மேலும் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழக அரசு மீது அதிருப்தியடைந்திருக்கிறது. இதுபோன்ற அரசியல் சூழலை அ.தி.மு.க. துல்லியமாக அவதானித்து, அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்வது, அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைத்துக்கொள்வது போன்ற பணிகளை தற்போதைய இரட்டைத்தலைமை செய்தால், அ.தி.மு.க. வலிமைப்பெறக்கூடும். 

ஆனால் கொடநாடு கொலை கொள்ளை, சசிகலாவின் மீள் வருகை, இரட்டை தலைமை, ஓபிஎஸ், இபிஎஸ் அதிகாரபகிர்வு, தேர்தல் ஆணைய நெருக்கடிகள என பல விடயங்களால் அக்கட்சி செல்லும் திசை தெரியாமல் தள்ளாடி வருகிறது. 

மேலும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் போன்ற முன்னணி தலைவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடைபெற்ற வருமான வரி சோதனை விடயங்களில் அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டு அரசியல் செய்துவருவதால் அ.தி.மு.க. பலவீனமாக காட்சியளிக்கிறது. 

இந்தத் தருணத்தில் அ.தி.மு.க. தெளிவாகவும், திடமாகவும் உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொண்டு பயணிக்க தொடங்கினால், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து அக்கட்சிக்கு 5 அல்லது 7 இடங்கள் வரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று கள ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. 

மக்களின் மனநிலையை துல்லியமாக அவதானித்து அ.தி.மு.க. தன்னுடைய அரசியல் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டால், அக்கட்சி தேசிய அளவில் கவனம் ஈர்ப்பதுடன் தி.மு.க., அ.தி.மு.க. என்ற திராவிட அரசியலை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல இயலும்.

இதனை அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் உணர்ந்து, தங்களது அரசியலை வகுத்துக்கொள்ள வேண்டும். இல்லாது விட்டால் காத்திருப்பு பலனளிக்காது தள்ளாட்டமே மீதமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04