(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு மூன்று உத்தேச குழாம்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட், சர்வதேச இருபது 20 கிரிக்கெட் ஆகிய மூவகை கிரிக்கெட் தொடர்களுக்கும் தனித்தனி குழாம்கள் பெயரிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரட்னவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அணிகளுக்கு தசுன் ஷானக்கவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, சாமிக்க கருணாரட்ன, ரமேஷ் மெண்டிஸ், ஜெவ்றி வெண்டர்சே, ப்ரவீன் ஜயவிக்ரம ஆகியோர் மூன்று குழாம்களிலும் இடம்பெறுகின்றனர்.

டெஸ்ட் குழாம் (24 வீரர்கள்)

திமுத் கருணாரட்ன (அணித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால், சாமிக்க கருணாரட்ன, ரமேஷ் மெண்டிஸ், மொஹமத் ஷிராஸ், ஷிரான் பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார, கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, ஜெவ்றி வெண்டர்சே, லக்ஷித்த ரசஞ்சன, ப்ரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, சுமிந்த லக்ஷான்.

சர்வதேச ஒருநாள் குழாம் (26 வீரர்கள்)

தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), அஷேன் பண்டார, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், சஹான் ஆராச்சி, வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, லஹிரு மதுஷன்க, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார, கசுன் ராஜித்த, ஜெவ்றி வெண்டர்சே, மஹீஷ் தீக்ஷன, ப்ரவீன் ஜயவிக்ரம.

சர்வதேச இருபது குழாம் (26 வீரர்கள்)

தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), அஷேன் பண்டார, நிரோஷன் திக்வெல்ல, துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, லஹிரு மதுஷன்க, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, நுவன் துஷார, கசுன் ராஜித்த, நிப்புன் மாலிங்க, லஹிரு குமார, ஜெவ்றி வெண்டர்சே, மஹேஷ் தீக்ஷன, ப்ரவின் ஜயவிக்ரம, லக்ஷான் சந்தகேன்.