இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று சனிக்கிழமை காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இன்று தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் வாக்களித்த பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மேற்கண்டவாறு ஊடகவியாலளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்கரையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைக் காவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்கரையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் ஏறக்குறைய 15 பேர் இருந்ததுள்ளார்கள்.

இதேவேளை, கிழக்கு கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட 41 பேர் கடந்த சில தினங்களின் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.