அதுருகிரிய மற்றும் பாதுக்கை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணம் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (20) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக  அதுருகிரிய மற்றும் பாதுக்கை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 17,936,500 ரூபா பணம் உட்பட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 36,51 ஆண்கள் இருவரும் 31 வயதுடைய பெண் ஒருவர் என்றும்   அவர்கள் பாதுக்கை மற்றும் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.