நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு இன்று முதல் தீர்வு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 80,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது என்ற திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளாந்த சமையல் எரிவாயு  சிலிண்டர்  விநியோகத்தில் 60 சதவீதத்தை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விநியோகிக்குமாறு கோப்  தலைவர் பேராசியிரியர் சரித ஹேரத் லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவத்தினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு எரிவாயு சிலிண்டரை தவிர வேறு மாற்று வழிமுறைகள் எதும் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் வாரத்திற்குள் சிலிண்டர் விநியோகத்தில் இவ்விரு  மாவட்டங்களுக்கு  முன்னுரிமை வழங்குமாறும் , இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் இருவார காலத்திற்குள் தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்ய துரிதகர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  கோப் குழு  லிட்ரோ நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.