பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள் !

21 May, 2022 | 02:00 PM
image

தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் நாளாந்தம் பொதுமக்கள் அவற்றை விநியோகிக்குமாறு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியன மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்ந நிலையிலேயே வலுச்சக்தி அமைச்சர் மேற்கண்டவாறு பொது மக்களிடம் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் வலுசக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அவ்வாறு மக்கள் போராட்டங்களிலோ அல்லது ஏதேனும் அசௌகரியமாக நடந்துகொண்டாலோ குறித்த எரிபொருள் நிலையத்திலோ அல்லது சமையல் எரிவாயு விநியோகிக்கும் இடங்களிலோ அனைத்து விநியோக நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்படும்.

அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்க முடியாதெனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55