நாட்டில் பெற்றோலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஓட்டமாவடியில் பெற்றோல் விநியோகம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) விநியோகிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போதும்,  ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களுடன் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.