சனத்தொகையில் 51 வீத பெண்களை கொண்ட நாட்டில் 5 வீத பெண் எம்.பி.க்கள்

21 May, 2022 | 12:53 PM
image

ரொபட் அன்டனி 

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஆளும் கட்சியின் பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட அஜித் ராஜபக்ச 29 மேலதிக வாக்குகளைப் பெற்ற தெரிவானார்.  மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட பிரதி சபாநாயகர் வேட்பாளரான ரோகிணி குமாரி கவிரத்ன 78 வாக்குகளைப் பெற்று அந்த போட்டியில் தோல்வியடைந்தார்.  

அதாவது  ரோஹினி கவிரத்ன பிரதி சபாநாயகராக  தெரிவு செய்யப்பட்டிருந்தால் அவர் வரலாற்றில் இடம் பெற்றிருப்பார்.  அதாவது இலங்கையின் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தில் உயர் பதவியை வகித்த முதலாவது பெண் என்ற சாதனையை  அடையாளத்தை ரோகினி பெற்றிருப்பார்.  

ஆனால் அந்த சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை.  இந்த இடத்தில நாட்டின் பெண்கள் எந்தளவு தூரம் இந்த அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பாக பார்க்க வேண்டியிருக்கின்றது. 

இலங்கையின்  சனத்தொகையில் பெண்களின் சதவீதம் 51 விதமாக இருக்கின்றது.   ஆனால் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற பாராளுமன்றத்தில் பெண்கள் 5.33 வீதமே பங்களிப்புச் செய்கின்றனர்.  

அதாவது 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இலங்கையின் சட்டவாக்க சபையில் வெறுமனே 12 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.  இதிலிருந்தே எந்தளவு தூரம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது குறைவாக இருக்கின்றது?  எந்தளவு தூரம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை மக்கள் அங்கீகரிக்காமல் இருக்கின்றனர்?  பெண் பிரதிநிதிகளை எந்தளவுதூரம் தெரிவு செய்யாமல் இருக்கின்றனர் போன்ற விடயங்களை புரிந்து கொள்ள முடிகின்றது. 

உலகிலேயே ருவாண்டாவிலேயே அதிகளவு பெண்கள் அந்த நாட்டின் சட்டவாக்க  சபையில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.  அந்த நாட்டில் சுமார் 50 வீதத்துக்கும் அதிகமான  பெண்கள்  சட்டவாக்க சபையில் இடம் பெறுகின்றனர்.  

அத்துடன் கியுபா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில்  அதிகளவு பெண்கள் அரசியல் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.  அமெரிக்காவில் 27 வீதமான பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். 

ஆனால் இலங்கை போன்ற பெண்கள் அதிக சதவீதமானோர்  வாழ்கின்ற நாட்டில்  5 வீதமே பெண்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவப்படுத்துகின்றனர்.  இது நாம் எந்தளவு தூரம் இன்னும் இன்னும் முன்னேறி செல்ல வேண்டியிருக்கின்றது?  எந்தளவு தூரம் இன்னும் நாம் அரசியல் ரீதியில் சிந்திக்க வேண்டி இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. 

அதுவும் உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு, முதலாவது பெண் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை உருவாக்கிய நாடு என்ற வகையில் இதுவரை பாராளுமன்றத்தில் ஒரு உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்படாமல் இருக்கின்றமை துரதிஸ்டவசமான நிலைமையாக காணப்படுகின்றது. 

சபாநாயகர் பதவி, பிரதி சபாநாயகர்  பதவி மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி ஆகிய மூன்றுக்கும் இதுவரை பெண்கள் தெரிவு செய்யப்படவில்லை.  ஆரம்பத்தில் இலங்கையில் செனட்சபை அமுலில் இருந்த காலத்தில் அதில் முதலாவது இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான எடிலைன் மொலமுரே    உப சபாநாயகராக பதவி வகித்திருக்கின்றார். அதாவது சனத்தொகையில் 51 வீதமாக காணப்படுகின்ற பெண்களின் பாராளுமன்ற பங்களிப்பு 5 வீதமாகவே இருக்கின்றது.  

அப்போது இலங்கையில் இரண்டு சபைகள் இருந்தன, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என 2 சபைகள்  காணப்பட்டன.   அதில் செனட் சபையில் அவர் உப தலைவராக செயற்பட்டார்.  

1977 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட  பாராளுமன்ற கொண்டுவரப்பட்ட  முறைமையில் ஒருவர் கூட இந்த பதவிகளுக்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.   பெண்களுக்கான ஒரு அங்கீகாரத்தை வழங்காமல் இருப்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் குறைவான விடயமாக இருக்கின்றது.  இதில் முக்கியமாக தற்போது  விருப்பு வாக்கு முறைமை  காணப்படுகின்றது.  இதில் ஒரு  மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஒரு கட்சிக்கான வேட்பாளர்களே பாரியளவு போட்டியை கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கு இடையிலேயே பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.  

எனவே பெண்களினால்  அந்தளவு தூரம் நிதி செலவிட முடியாமை  மற்றும்  போட்டியிடுவதற்கான தயக்கம் போன்றவை காரணமாகவே இவ்வாறு பெண்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் குறைவாக இருக்கின்றது. 

 இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து பெண்கள் அரசியலில் ஈடுபடும் ஒரு நிலைமை காணப்படுகின்றது.  உதாரணமாக பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து சந்திரிகா குமாரதுங்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசியலில் ஈடுபட்டனர்.   

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின்  மனைவியான வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அரசியல் ஈடுபடுகின்றார். அதேபோன்று தற்போது இந்த ரோகிணி குமாரி கூட அரசியல் குடும்பத்திலிருந்து வந்தனர்.   அதேபோன்று தலதா அத்துகோரல  மற்றும் ஹிருணிகா போன்றோரும் அரசியல் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.  

அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து வருகின்றவர்களுக்கு  இதில் ஒரு அளவு வெற்றி பெற முடிகின்றது.  ஆனால் சாதாரண குடும்பம் ஒன்றில் இருந்து பெண்கள் அரசியலில் வந்து சாதிப்பது மிகவும் ஒரு அரிதான மிகவும் ஒரு கடினமான விடயமாகவே இலங்கையில் காணப்படுகின்றது. 

இப்போது இந்தப்   பிரதி சபாநாயகர் தெரிவில் கூட ஒரு பெண் வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒரு ஆர்வத்தை வெளிக்காட்டி இருந்தார்.  எனினும் அந்த முயற்சி இறுதியில் அது கைகூடவில்லை.  

எப்படியிருப்பினும் இலங்கையில் பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்கான பொறிமுறை உருவாக்கப்படுவது மிக அவசியமாகும்.  அதில் அரசியலமைப்பிலேயே இந்த விடயங்கள் உட்படுத்தப்பட வேண்டும்.  

முக்கியமாக அரசியலமைப்பின் ஊடாக இந்த பெண்களின் வகிபாகம், பெண்களுக்கான கோட்டா முறை, பெண்களுக்கான அரசியல் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் திருத்தங்கள் கொண்டு வரப்படுவது இன்றியமையாததாக இருக்கிறது.  அதாவது பாராளுமன்றத்தில் உதாரணமாக 25 வீத பெண்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும்   மாகாண  சபைகளில் இருக்க வேண்டும் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு கொண்டுவரப்படவேண்டும்.  

தற்போதைய சூழலில் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் 25 வீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  எனினும் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு எவ்வாறான நெருக்கடி காணப்பட்டன என்பது சகலருக்கும் தெரியும்.   

அந்த நிலைமை மாறவேண்டும். பெண்களாலும் சாதிக்க முடியும், அவர்களினால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் அவர்களினால்  நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும், பாராளுமன்றத்துக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும்,  பிரதேச சபைகள் மற்றும்  மாகாண சபைகளை கொண்டு நடத்தமுடியும் என்ற  விடயம் வலியுறுத்தப்படு அவர்களுக்கான வந்து பங்களிப்பு உறுதிப் படுத்தப் படுவது மிக அவசியமாக குறிப்பாக மாகாண வது முக்கியமாகும். 

மாகாண சபைகளில் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் வகிபாகத்தை பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.   

எதிர்காலத்தில் அதிகளவு பெண்களை இந்த ஆட்சி மன்றங்களுக்கு கொண்டு வரவேண்டும்.   அதிகளவு பெண் வேட்பாளர்களுக்கு  வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும்.  அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.  அவர்கள் அரசியல் செய்வதில், அரசியலில் ஈடுபடுவதில், தேர்தலில் போட்டியிடுவதில், வெற்றி பெறுவதில் காணப்படுகின்ற தடைகள் இடையூறுகள் களையப்பட வேண்டியது அவசியமாகும்.  அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். 

முக்கியமாக பாராளுமன்றத்தில் உயர் பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கப்படவேண்டும்.  மிக அதிகளவான திறமையான  பெண் தலைமைத்துவங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.  

தலதா அத்துகோரள, சுதர்ஷினி பெர்னாண்டே் புள்ளே  போன்ற மிகவும் திறமையான செயற்றிறனான  பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கூட பாராளுமன்றத்தில் இருக்கின்றனர்.   அவர்கள் சரியான முறையில் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பயன் படுத்தப்படுவது முக்கியமாகும்.   ஆனால் தொடர்ச்சியாக பெண்கள் தெரிவு  செய்யப்படுவது  வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கின்றது.  

பெண்களின் பங்களிப்பு பாராளுமன்றத்தில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கின்றது.   இந்த விடயத்தில் எப்போது மாற்றம் வரும்? எப்போது மாற்றம் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாமலேயே இருக்கின்றது.     மாற்றம் வரவேண்டியது  முக்கியமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54