ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

U.S. President Joe Biden disembarks Air Force One as he arrives at the Osan Air Base in Pyeongtaek, South Korea May 20, 2022.
[Lee Jin-man/Pool via Reuters]

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பான் செல்லவுள்ளார். 

முன்னதாக நேற்று  தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.