ரஷ்யாவின் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக் கூடிய வல்லமையைக் கொண்ட புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பிய கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் புகுதியை தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் பாடசாலைமாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் இன்று வெள்ளிக்கிழமை இரவு செய்திகளை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய விண்வெளி முகவர் நிலையமான ரொஸ்கொமஸின் தலைவரான திமித்ரி ரொகோஸினால் மேற்படி கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்குலக நாடுகள் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தத் தயார் நிலையில் உள்ளமை தொடர்பான பிந்திய அச்சுறுத்தலாக இது கருதப்படுகிறது.
அவர் மேற்படி பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது அந்த மாணவர்களுக்கு ரஷ்யாவின் பலதரப்பட்ட தந்திரோபாய ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுவதை வெளிப்படுத்தும்; காணொளிக் காட்சிகளை காண்பித்தார்.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய சாத்தான்-2 ஏவுகணையானது மணிக்கு 15,880 மைல் வேகத்தில் பயணித்து உரிய இலக்கைத் தாக்கக் கூடியதாகும். இந்நிலையில் மேற்படி ஏவுகணை எதிர்வரும் செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையான இலையுதிர் காலத்தில் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருக்கும் என திமித்ரி ரொகோஸின் கூறினார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM