மீண்டும் சூடு பிடிக்கிறது கச்சதீவு

By Digital Desk 5

20 May, 2022 | 05:09 PM
image

குமார்சுகுணா

பல தசாப்தங்களாக பேசுபொருளாக இருந்து வருகின்ற கச்சதீவு மீண்டும் ஒருமுறை தற்போது சூடுப்பிடித்துள்ளது. 

இதற்கு காரணம் நமது நாடான இலங்கை தற்போது முகங்கொடுத்து வருகின்ற பொருளாதார சிக்கல்களே. 

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் நாடு தற்போது தவித்து வருகின்றது. 

இதில் இருந்து தீர்வை பெற்றுக்கொள்ள அண்டைய நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் உதவியை அதிகம் நாடியுள்ளது இலங்கை. 

image.png

இந்நிலையில் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கச்சதீவை மீட்க வேண்டும் என அண்மையில் டில்லிக்கு விஜயம் செய்திருந்த தமிழகத்தின் முதல்வர் ௧டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

பல நெடுங்காலமாகவேய இந்தியா கச்சதீவை மீட்க வேண்டும் என ஒலித்த குரலுக்கு இது வலுசேர்பதாய் அமைந்துள்ளது. 

ஆயினும் இந்த தருணத்தில் இதனை மீட்க நினைப்பது சரியா பிழையா என்ற வாத பிரதிவாதங்களும் வந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில் , இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கச்சதீவை இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதை தாங்கள் எதிர்ப்பதாகவும் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் , இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையை பயன்படுத்தி கச்சதீவை இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கச்சதீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விட்டால் இலங்கை மீனவர்கள் பெரிய அளவிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ஏற்கெனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் கடல் வளம் அழிந்து வருகிறது.

இந்நிலையில் கச்சதீவை குத்தகைக்கு விட்டால், எங்களின் தொழில் பாதிக்கப்படுவதோடு, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக தமிழக ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுதும் உள்ள தமிழர்களிடம் பெரும் செல்வாக்கை பெற வேண்டுமானால், கச்சதீவை இந்தியா 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற வேண்டும் என இதன்போது அவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தபோது, பாரதிய ஜனதா கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் ஜகத் பிரகாஷ் நட்டாவிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது  கச்சதீவு பிரச்சினை உண்மையில் பல தரப்பினருக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

சரி இந்த கச்சதீவு உண்மையில் யாருக்கு சொந்தம் இந்தியா ஏன் இதனை உரிமை கொண்டாட நினைக்கின்றது என்று பார்ப்போம்.

கச்சதீவு யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியாவற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சதீவு ஒப்பந்தப்படி, இலங்கைக்கு சொந்தமாகியது.

இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீற்றராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் மட்டும் இங்கு உள்ளது.

ஆயினும் , 1170-ஆம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சதீவு.

அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சதீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது.

அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சதீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு என்ற கருத்தும் உள்ளது. அப்படியானால் கச்சதீவு இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால்,1925ஆம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின்  மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சதீவு ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகின்றது. அப்படியானால் இது இந்தியாவுடையது.

எது எப்படியோ , 1974ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா இடையே கச்சதீவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 

மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் இந்த ஒப்பந்தத்தின்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை.

ஆயினும், இந்திய மீனவர்கள் கச்சதீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்றும் இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது.

எனவே, கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் என்று இன்றளவும்  தமிழக எதிர்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. ஆயினும், கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்து தரவில்லை என 2013-இல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியுள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என இந்திய ஒன்றிய அரசு, நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தது.

ஆயினும் தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்கள் கச்சதீவை மீட்போம் என தொடர்ந்து உறுதி மொழி கொடுத்து வருகின்றனர்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை மீட்பேன் என உறுதியளித்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் .

ஆனால் தி.மு.க. ஆட்சியில் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போதைய தி.மு.க.

தலைவரும் தமிழக முதலவருமான ஸ்டாலின் கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து வருகின்றார்.

இ்ந்நிலையில் இந்தியாவிற்கு கச்சதீவு குத்தகைக்கு விடப்பட போவதாக வரும் செய்திகள் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் எனில் ஏற்கனவே ஆட்சியாளர்கள் இலங்கை நிலப்பரப்பை வெளிநாடுகளுக்கு விற்றுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுகின்ற நிலையில் இலங்கை நிலப்பரப்பு இந்தியாவுக்கு தற்போது கொடுக்கப்படும் என்றால் அது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.  பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்று. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24