(ஆர். ராம், எம்.எம். மின்ஹாஜ்)

கிளிநொச்சி மட்டுமல்ல தெற்கிலும் பொலிஸாரை தாக்குவதாக சபையில் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இனவாதத்தை தூண்டி செயற்பாடுகளை குழம்பிய குட்டையில் மீன்பிடிக்காதீர்கள் என ஒன்றிணைந்த எதிரணியினரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் விசேட கூற்றொன்றை முன்வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த ஆதரவணி எம்.பி. யான தினேஷ் குணவர்தன கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரை ஒரு குழுவினர் சுற்றி வளைத்து தாக்கியதில் சில பொலிஸார் காயமடைந்துள்ளனர். அது தொடர்பாக அரசாங்கம் எடுக்கப் போகும் நடவடிக்கை என்னவாக உள்ளது என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.