அருள்நிதியின் ' D பிளாக்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

20 May, 2022 | 01:52 PM
image

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'D பிளாக்' படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் ' D பிளாக்'. நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அவந்திகா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா ரியாஸ், சரண் தீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரோன் ஏதன் யோஹனன் இசையமைத்திருக்கிறார். எம் என் எம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அரவிந்த் சிங் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'D பிளாக்' ஜூலை மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அருள்நிதி நடிப்பில் வெளியான கிரைம் திரில்லர் மற்றும் ஹாரர் த்ரில்லர் படங்கள் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று இருப்பதால், ' D பிளாக்' படமும் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்