(ஆர்.வி.கே)

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள  பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக சத்தமில்லாமல் நில அளவை பணிகள் தற்பொழுது  மேற்கொள்ளப்பட்டுவருவதாக வலிவடக்கு மீள் முடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி,பலாலி ,போன்ற பிரதேசங்களில் தற்பொழுது நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அசோகா கோட்டல் நிலப்பரப்பு ,பண்ணையில் வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பரப்பு, போன்றன காவற்துறையின் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.சத்தமில்லாமல் இந்த அபகரிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றது ஆனால் எங்களுடைய தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த விடையத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.மக்களுக்கான காணிகள் மக்களுக்கே வழங்கவேண்டும் என்று வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்தார்.