முன்னணி நகைச்சுவை நடிகையும், சிறந்த குணச்சித்திர நடிகையுமான கோவை சரளா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'செம்பி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'செம்பி'.‌ 'என்ன சொல்லப் போகிறாய்' பட புகழ் நடிகர் அஸ்வின் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பட புகழ் நடிகை ரியா நடித்திருக்கிறார். 

இவர்களுடன் கோவை சரளா வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ஜீவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார். 

தரமான படங்களை தயாரித்து வரும் தொடர்ந்து தயாரித்து வரும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனம், ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் ஆர் ரவீந்திரன், அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் 'செம்பி'யை தயாரித்திருக்கிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக் என படத்தின் இரண்டு வகையான போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஒரு போஸ்டரில் நடிகை கோவை சரளா முக்காடு அணிந்து தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

மற்றொரு போஸ்டரில் நாயகன் அஸ்வின் குமார் ஒரு சிறுமியிடம் பேசுவது போல் அமர்ந்திருப்பதும் பார்வையாளர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டுகிறது.

'மைனா', 'சாட்டை', 'கும்கி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'செம்பி' கட்டாயமாக கொமர்ஷல் வெற்றியை பெறவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.