இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு 'வேட்டுவம்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சர்பட்டா பரம்பரை' என தொடர்ந்து தரமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் 'வேட்டுவம்'. 

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் எனும் பட நிறுவனத்துடன் பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. 

இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'வேட்டுவம்' என்ற தலைப்பு வித்தியாசமாக இருப்பதுடன், வேட்டையாடுதல் என்னும் பொருளைத் தரும் தலைப்பு என்பதாலும், இயக்குநர் பா. ரஞ்சித்தின் கைவண்ணத்தில் உருவாவதாலும் இதற்கு அறிவிப்பு நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.