இயக்குநரும், நடிகருமான இரா. பார்த்திபன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படமான 'இரவின் நிழல்' வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'ஒத்த செருப்பு' படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தமிழ் திரையுலகை சார்ந்த படைப்பாளி இரா. பார்த்திபன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'இரவின் நிழல்'.

இரா. பார்த்திபன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம், உலக அளவில் முதன்முறையாக நான் லீனியர் பாணியில் அமைந்த சிங்கிள் ஷாட் மூவி என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா சகா, அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற 'மாயவா தூயவா..' என்ற ஒரு பாடல் அண்மையில் இணையத்தில் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் முதன் முதலான சிங்கிள் ஷாட் படம் என்பதாலும், பார்த்திபனின் புதிய முயற்சி என்பதாலும், ஏ ஆர் ரகுமானின் பங்களிப்பு இருப்பதாலும், 'இரவின் நிழல்' படத்திற்கு நட்சத்திர நடிகர்களின் படத்திற்கு இணையான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.