(என்.வீ.ஏ.)
நடப்பு ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) இரவு நடைபெற்ற போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
எனினும் அதன் ப்ளே ஓவ் வாய்ப்பு, டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கும் மும்பை இண்டியன்ஸுக்கும் இடையில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டி முடிவிலேயே தங்கியிருக்கின்றது.
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிபெற்றால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ப்ளே ஓவ் வாய்ப்பு நிகர ஓட்ட வேக அடிப்படையில் அற்றுப்போகும்.
குஜராத் டைட்டன்ஸுடனான போட்டியில் 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம், க்ளென் மெக்ஸ்வெலின் சகலதுறை ஆட்டம் என்பன பெங்களூரின் வெற்றியை இலகுவாக்கின.
விராத் கோஹ்லியும் பவ் டு ப்ளெசிஸும் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பவ் டு ப்ளெசிஸ் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் மெக்ஸ்வெலுடன் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய க்ளென் மெக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ராஷித் கான் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
ஷுப்மான் கில் (1), மெத்யூ வேட் (16), ரிதிமான் சஹா (31) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க, குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை 62 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவும் டேவிட் மில்லரும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
டேவிட் மில்லர் 34 ஓட்டங்களுடன் களம் விட்டகன்ற சொற்ப நேரத்தில் ராகுல் தெவாட்டியா 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். (132 - 5 விக்)
ஹார்திக் பாண்டியா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். 9 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட ராஷித் கான் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வுட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ளென் மெக்ஸ்வெல் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM