நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 3,900 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சமையல் எரிவாயுவுடன் வந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் நாளையதினம் மேலும் 80 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியுமெனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.