உலகளாவிய உணவு நெருக்கடி  மேலும் தீவிரமடையும் அபாயம் - ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

19 May, 2022 | 09:10 PM
image

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக  ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No description available.

அமைச்சரவைக் கூட்டமொன்றில் இந்த வாரம் ஆற்றிய  உரையின் போது அவரால் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை குறித்து  பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் இன்று  வியாழக்கிழமை (19.05.2022) செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் இதன்போது உலகளாவிய பட்டினி மட்டமானது புதிய உயரமொன்றை எட்டியுள்ளதாக அந்தோனியோ குட்டரெஸ் பிரகடனம் செய்தார்.

No description available.

 உணவு தொடர்பில் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள மக்கள் தொகை கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் இருந்த 135 மில்லியனிலிருந்து இரு வருட காலப் பகுதியில் தற்போது 276 மில்லியனாக அதிகரித்துள்ளதாக  அந்தோனியோ குட்டரெஸ் கூறினார். 

No description available.

பட்டினியில் வாழும் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டிலிருந்து 500 சதவீதத்திற்கும் அதிகமாக  அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். முக்கிய தானியங்கள்,  சமையல் எண்ணெய்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கப் பயன்படும் பசளைகள் ஆகியவற்றின் உற்பத்திகளில் ரஷ்யாவும் உக்ரேனும் பெருமளவு வகிபாகத்தை வகித்து வருகின்ற நிலையில் அந்நாடுகளுக்கிடையிலான போர் மேற்படி உற்பத்திகளைப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No description available.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையை தணிவிப்பதற்கான உடன்படிக்கையொன்றை எட்டும் முகமாக அவர் ரஷ்யாவுடனும் ஏனைய  முக்கிய நாடுகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கலந்துரையாடி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10