மே 09 வன்முறைகள் - இன்று மேலுமொருவர் உயிரிழப்பு

By T Yuwaraj

19 May, 2022 | 05:54 PM
image

நாட்டில் மே மாதம் 09 திகதி ஏற்பட்ட அமைதியின்மையால் இன்று 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது, 

Articles Tagged Under: Death | Virakesari.lk

தலை மற்றும் மார்பில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரே இன்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பெரஹெர மாவத்தைக்கும் பெய்ரா ஏரிக்கும் இடையிலான நடைபாதையில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right