வடக்கில் நடக்கும் குற்றச்செயல்களின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் அமைதியின்மை நிலவவும் இவர்களின் தூண்டுதல் உள்ளன. நாட்டின் அமைதியை சீர்குலைத்து மீண்டும் மோசமனான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கப் பார்க்கின்றனர் என ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் நிலைமைகளை கட்டுப்படுத்த வடக்கு அரசியல் தலைமைகள் சரியாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

நாட்டில் இன்று நிலவும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைபாட்டை வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.