பாணின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாகும்.

அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த விலையேற்றம் அமுவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் பிறிமா நிறுவனம் இன்று அதிகரித்தமையே குறித்த விலையேற்றத்திற்கு காரணமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.