பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வில்லை - காஞ்சன விஜேயசேகர

Published By: Digital Desk 3

19 May, 2022 | 12:55 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டிவிடும் வகையில் ஒரு சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் திட்டமிட்ட வகையில் தவறான செய்திகள் வெளியாகுகின்றதை அவதானிக்க முடிகிறது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 121 ரூபாய்க்கு  எரிபொருள் விநியாகிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் எதிர்தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அடுத்தவாரம் புதிய அமைச்சரவை - வெளியாகியுள்ள தகவல் - ஐபிசி தமிழ்
வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர 

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல் தோற்றம் பெற்றுள்ள பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  மானிய விலையின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பொய்யான செய்தியினால் ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போதும்,இதற்கு முன்னரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தை விலைக்கு குறைவாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு விசேட வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களிலும் விசேட சலுகை வழங்கப்படமாட்டாது. தவறான செயற்தி சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் வாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்து பொலிஸ்மா அதிபரிடம் சபாநாயகர் வினவியுள்ளார்.

இதற்கமைய சந்தை விலைக்கமைய அதாவது ஒரு லீற்றர் பெற்றோல் 334 ரூபாவிற்கும்,ஒரு லீற்றர் டீசலின் விலை 289 ரூபாவிற்கும் நடைமுறை நிபந்தனைக்கமைய விநியோகிக்க முடியும்  என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் வாகன பழுதுபார்க்குமிடத்தில் பாரிய தவறு இழைக்கப்பட்டுள்ளது.தற்போதைய நடைமுறை நிபந்தனைகள் கடந்த பலமாத காலமாக திருத்தம் செய்யப்படவில்லை.பொலிஸ் திணைக்களததின் தொழினுட்ப கோளாறு தொடர்பினால் தவறு இழைக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஜனாதிபதி உட்பட பிரதமருக்கு மானிய விலைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகளுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொலிஸ்,இராணுவ சேவை,நீதிமன்ற சேவைகளுக:கு கூட முன்னுரிமை வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வெறுப்பினை தூண்டி விடும் வகையில் ஊடகங்களில் திட்டமிட்ட வகையில் தவறான செயற்திகள் வெளியிடப்படுகின்றன. இவை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு  குறித்து சபாநாயகர் உரிய அவதானம் செலுத்த வேண்டும்.

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசைக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தும் பொது மக்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வரிசையில் நிற்பதற்காக பெற்றோல் விநியோகிக்க முடியாது.டீசல் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் கப்பலுக்கு நேற்று முன்தினம் இரவு தான் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் தரையிறக்கப்பட்டு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிப்பதற்கு குறைந்தப்பட்சம் இரண்டு நாட்களேனும் தேவைப்படும். 

ஆகவே பொது மக்களிடம் வலியுறுத்துகிறேன் தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16