(ஏ.என்.ஐ)

கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவினால் வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களால் அங்கு சீற்றம் ஏற்பட்டுள்ளது.

பருப்பு, அரிசி மற்றும் பிற பொருட்களை விநியோகிப்பதன் மூலம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு செல்வாக்கு செலுத்த சீனாவின் முயற்சி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

உணவு  பொருட்கள் சீன அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட போதிலும் சீன வர்த்தக முத்திரை கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பைகளில் மறைக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு  ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவுகளை விநியோகித்தமை இலஞ்சத்தில் மிக மோசமான நிலை என அந்த செய்தி அறிக்கைகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகில் எங்கும் இவ்வாறு வெளிநாட்டு தூதரகம் ஒன்று உள்நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு இதுபோன்ற பங்களிப்பை வழங்காது.

குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாட்டில் சீனா அரசியல்வாதிகளுடன் தீவிரமாக  செயற்பட்டு சீன இலட்சியமான பட்டுப்பாதை முன்முயற்சியை இலக்காக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கான சீன நன்கொடையை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் சீன - இலங்கை நட்புறவு சங்கம் அங்கீகரித்து, உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சீனத் தூதரகத்திடம் இருந்து பணத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இலங்கை வெளிவிவகாரச் சேவையின் அங்கத்தவர்கள் இத்தகைய நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதல்ல. இதனால் வெளிநாட்டுச் சேவை மற்றும் வெளிவிவகார அமைச்சு இக்கட்டான சூழ்நிலையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.