பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் சிக்கல் - சபாநாயகர்

By T. Saranya

19 May, 2022 | 12:41 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல் தொடர்ந்தும் காணப்படுவதாக சபாநாயகரால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸ்மா அதிபரிடம் சபாநாயகரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை பொலிஸ் எரிபொருள் நிலையங்களில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே எரிபொருளுக்கான பணத்தை செலுத்திய பின்னர் அதனை விநியோகிக்குமாறு பொலிஸ்மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, இது சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை மாத்திரமேயாகும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right