ரொபட் அன்டனி
ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ ஜப்பானிடம் 3 பில்லியன் டொலர் கடன் உதவியைக் கோரியிருந்தார். அதற்கான கடிதம் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஜப்பான் தூதரகம் அதில் மூன்று பில்லியன் என்று குறிப்பிடாமல் கடனுதவியை பெற்றுக்கொடுக்குமாறு கடிதத்தில் குறிப்பிடுமாறு கோரியிருந்தது. அதனடிப்படையில் மீண்டும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜப்பான் தூதுவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜப்பான் தூதுவர் உடனடியாக இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஜப்பான் சென்றிருக்கின்றார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசியல் குடும்பம் மீது ஜப்பானுக்கு இப்போது ஒரு பிணைப்பு காணப்படுகின்றது. காரணம் 1945ஆம் ஆண்டு இரண்டாவது உலக யுத்தத்தில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஜப்பான் தொடர்பான ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஜப்பானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் அதில் இலங்கையின் பிரதி நிதியாக கலந்துகொண்ட ஜே.ஆர். ஜெயவர்தன ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், ஜப்பானைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். சகல தரப்பினராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே ஜப்பான் பெரும் ஜாம்பவானாக பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தது.
இலங்கை தற்போது மிகப் பெரியதொரு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. டொலர்கள் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக எரிபொருளுக்கான தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு என்பன மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட நேரம் நீண்ட தூரம் வரிசையில் நிற்பதை காண முடிகின்றது.
கடந்த சில தினங்களாகக்கூட எரிபொருளுக்காக மக்கள் இரண்டு கிலோமீற்றர், மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் அவ்வாறு வரிசையில் நின்றும்கூட எரிபொருள் கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது. மேலும் நீண்டநேர மின்வெட்டு மக்களை மேலும் கடுமையாக பாதித்துள்ளது.
அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நாடு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்களின் வருமானம் குறைந்திருக்கின்றது. தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் சரிவைச் சந்தித்திருக்கின்றனர்.
தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மிகப்பெரிய ஒரு நெருக்கடி நேரத்திலேயே அது மக்களின் போராட்டமாக மாறி தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. முன்னர் இருந்த அமைச்சரவை மற்றும் பிரதமர் பதவி விலகல் இடம்பெற்றதுடன் தற்போது புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் எவ்வாறு இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் ? டொலர் பற்றாக்குறையை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு நீக்கப்படுமா? போன்ற பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் மிக முக்கியமாக ஜப்பானின் இலங்கைக்கான தூதுவருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் ஜப்பான் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

காரணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த கையோடு இலங்கைக்கான தூதுவர் ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கின்றார். அங்கு அவர் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ ஜப்பானிடம் 3 பில்லியன் டொலர் கடன் கடன் உதவியை கோரியிருந்தார். அதற்கான கடிதம் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஜப்பான் தூதரகம் அதில் மூன்று பில்லியன் என்று குறிப்பிடாமல் கடனுதவியை பெற்று கொடுக்குமாறு கோரியிருந்தது.
அதன் அடிப்படையில் மீண்டும் அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜப்பான் தூதுவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடனடியாக இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஜப்பான் தூதுவர் ஜப்பான் சென்றிருக்கின்றார்.
ஜப்பானுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் குடும்பத்துக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுகின்றது.

சிறந்ததொரு நட்பு தொடர்பு பிணைப்பு காணப்படுகின்றது. காரணம் 1945ஆம் ஆண்டு இரண்டாவது உலக யுத்தத்தில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஜப்பான் தொடர்பான சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஜப்பானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனால் அதில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், ஜப்பானை கட்டியெழுப்புவதற்கு சகலரும் உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதன் பின்னர் சகல தரப்பினராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னரே ஜப்பான் பெரும் ஜாம்பவானாக பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தது. எனவே அந்த இக்கட்டான நேரத்தில் ஜப்பானுக்கு கைகொடுத்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் குடும்பம் மீது ஜப்பானுக்கு எப்போதுமே ஒரு பிணைப்பு காணப்படுகின்றது.
அத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் ஜப்பானுக்கு ஒரு பிணைப்பு காணப்படுகின்றது. அதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்த உதவியை விரைவுபடுத்த கோரியமை காரணமாக ஜப்பான் விரைவாக இந்த இரண்டு பில்லியன் டொலர்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம் இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் சுமார் 3 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு இன்னும் நான்கு மாத காலங்கள் எடுக்கும்.
எனவே இந்த நான்கு மாத காலங்களில் எவ்வாறு எரிபொருள் எரிவாயு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது என்று ஒரு கேள்வி காணப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கிடைக்கின்ற ஒரு பில்லியன் டொலர் உதவிகளும் இந்த மே மாதம் முடிவுடன் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் என்ன செய்வது? இந்நிலையில் ஜப்பான் 2 பில்லியன் அல்லது 3 பில்லியன் டொலர்களை வழங்கினால் இந்த மூன்று மாத காலத்துக்கு இலங்கைக்கு மிகப்பெரிய ஒரு நிவாரணமாக அமையும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இது உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே ஜப்பான் என்ன செய்யப் போகின்றது என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஜப்பான் சென்றுள்ள அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இலங்கை வந்ததும் இதன் முன்னேற்றத்தை காண முடியும்.