பொக்ஸ் ஓபிஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ' விருமன்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்', 'புலிக்குத்தி பாண்டி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'விருமன்'.
இதில் நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், கருணாஸ், இந்திரஜா, மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.
எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு ஓகஸ்ட் 31ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிரூக்கிறது.
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு 'சுல்தான்' என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டும்தான் வெளியானது. இந்த திரைப்படமும் வணிகரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால், 'விருமன்' வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM