(லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் நிர்வாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகளை மூடி மறைத்து  விட்டு பாதுகாப்பு படைகளை முகாமிற்குள் அரசாங்கம் முடக்கி விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என தற்போது பாதுகாப்பு அமைச்சினால் கூற முடியுமா என கூட்டு எதிர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே அரசாங்கம் பதவி விலகியோ தேர்தலை நடத்தியோ நாட்டை பாதுகாக்க வழிவிட வேண்டும். வடக்கிலிருந்து தென்னிலங்கைக்கு பிணங்களை கொண்டு வந்த காலத்தை மீண்டும் உருவாக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது. வடக்கு கிழக்கில் புலனாய்வு சேவைகள் இன்றியமையாததாகும். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளை அரசாங்கம் இழிவுப்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில்  இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.