(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
காலி முகத்திடல் 'கோட்டா கோ கம 'உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற வேளை மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த பொலிஸார் தடை விதித்ததால் உறவுகளை இழந்த சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமைதியான முறையில் நினைவேந்தலை நடத்த அனுமதி வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் மாத்திரம் தடை விதித்தமை குறித்து பிரதமர் விசேட அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் (18) புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒரு அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ ஏற்பாடு செய்யாத நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார பொது மக்கள் நினைவு கூரலில் ஈடுப்படுவதை தடுக்க முயன்றுள்ளார்கள்.
அத்துடன் பதாதைகள் மற்றும் புகைப்படங்களை அகற்றுமாறும் குறிப்பிட்டுள்ளார்கள்.
காலி முகத்திடல் கோட்டா கோ கம உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ள வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ள பின்னணியில் மட்டக்களப்பில் மாத்திரம் தடைவிதிக்கப்பட்டுள்ளமை தொட்பில் விசேட கவனம் செலுத்தி உரிய கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.