(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில், நீர்த்தேக்கத்தின் மத்தியில் வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்குவது அழகிய காட்சியாக மாறியுள்ளது.

இந்த அழகான பூக்கள் ஊதா, வெள்ளை மற்றும் நீல நிறங்களை கொண்டது. இந்த மலர்கள் கொத்து கொத்தாக பூத்துள்ளதோடு, இந்த பூக்களில் முட்கள் உள்ளதும் குறிப்பிடதக்கது.

ஒவ்வொரு முறையும் நீர் வற்றும் போதும் இந்த அழகான பூக்கள் பூத்து குலுங்குவதாக இதனை பார்வையிடுவதற்கு வருவோர் கூறுகின்றனர்.