கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல்!

Published By: Digital Desk 4

18 May, 2022 | 03:31 PM
image

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் தமிழினப்  படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது . 

ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இன்று காலை 10 .30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் அனைத்து சுடர்களும் பொதுமக்களால் ஏற்றப்பட்டன. அதனை தொடர்ந்து மத தலைவர்கள் நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்த அதனை தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொது சுடரினை போரில் ஒரு கையை இழந்த பொதுமகன் ஏற்றிவைத்தார்.  அதனை தொடர்ந்து நினைவேந்தல் பிரகடனம் வாசிக்கப்பட்டது .

அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற வளாகத்தை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு இராணுவ புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்தோடு முள்ளிவாய்க்கால் கிராமம் ஆரம்பிக்கும் பகுதியிலிருந்து கிராமம் முடிவடையும் பகுதிவரையான 3.5 km பிரதான வீதியில் நான்கு இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததோடு அஞ்சலி நிகழ்வுக்கு வருகை தந்தவர்களது வாகன இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

நினைவேந்தல் வளாகத்தில் பல்வேறு தரப்பினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

(படங்கள் -  கே .குமணன்)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51