பெற்றோல் வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் - அமைச்சர் காஞ்சன

Published By: Digital Desk 5

18 May, 2022 | 04:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

டீசல் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் கிடையாது. பெற்றோல் விநியோகத்தில் மாத்திரம் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளதால் எதிர்வரும் இரு நாட்களுக்கு பெட்றோல் வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Crises created in last 24 months not legacy of this administration: State Minister  Kanchana

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் நங்கூரமிடப்பட்டுள்ள  பெட்றோல் கப்பலுக்கு டொலர் செலுத்த முடியாத நெருக்கடி நிலை காணப்பட்டுள்ளவதால் பெற்றோல் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேயசேகர சபையில்  தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (18) சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

உண்மை காரணிகளை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. டீசல் விநியோகம் தற்போது வழமை போல் முன்னெடுக்கப்படுகிறது.

1090 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, ஒடொ மற்றும் சுபர் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பெட்றோல் விநியோக கட்டமைப்பில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.எரிபொருள் கப்பல்களுக்கு டொலர் செலுத்துவது பாரிய நெருக்கடி தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கு டொலர் செலுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.

 குறித்த எரிபொருள் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் செலுத்த வேண்டிய 53 மில்லியன் டொலர் செலுத்தாத காரணத்தினால் அந்நிறுவனம் தற்போது பெட்றோல் விடுவிப்பை இடை நிறுத்தியுள்ளதால் பெற்றோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்றோல் பெறுகைக்காக பொது மக்கள் வரிசையில் நிற்பது பயனற்றது என்பதை நேற்று முன்தினமே அறிவித்தோம்.இருப்பினும் எரிபொருள் நிரப்பு நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக வரிசையில் நிற்க வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 

பெட்றொல் விநியோகம் நாளை அல்லது நாளை மறுதினம் விநியோகம் வழமைக்கு திரும்பும்.  

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சுக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற 67 யோசனைகளில் 39 யோசனைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. 

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் ,டொலர் நாணய அலகின் பெறுமதி உயர்வடைவதாலும்  எரிபொருள் கொள்வனவிற்காக ஒதுக்கப்படும் டொலர் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

எதிர்வரும் ஜூலை மாதம் எரிபொருள் கொள்வனவிற்கு மாத்திரம் 530 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

மண்ணெண்ணெய் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

கடற்தொழிலாளர்கள்,பெருந்தோட்ட மக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரண விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87  ரூபாவிற்கு வழங்கப்படுகிறது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மாத்திரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 350 ரூபாவை செலவிடுகிறது.

டீசல் விலையேற்றத்திற்கு அமைய பேரூநது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் பெரும்பாலான பேருந்து உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் முறையற்ற வகையில் பேருந்து இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 கடற்தொழிலாளர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு  மண்ணெண்ணெயை நேரடியாக விநியோகிக்கும் திட்டம் செயற்படுத்தப்படும். இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் ஓரிரு நாட்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றார்

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சேவைக்கு சமூகமளிக்க முடியாவிடின், விடுமுறை  கோருங்கள் என நிறுவன பிரதானிகள் குறிப்பிட்டுள்ளார்கள். 

இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தேசிய அலவதுவெல பிரமரிடம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

பெட்றோல் கொள்வனவில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண உரிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து 160மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை  எரிபொருள் கொள்வனவிற்கு பயன்படுத்த முடியாது. குறித்த தொகையை எரிபொருள் கொள்வனவிற்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 3 மில்லியன் கடன் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் அத்தரப்பினரிடமிருந்து உதவி பெறுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04